தமிழ்நாடு செய்திகள்

'தமிழ்நாடு தலைகுனியாது' - தி.மு.க. பேச்சாளர்கள் அடுத்த மாதம் முழுவதும் தேர்தல் பிரசாரம்

Published On 2026-01-27 13:18 IST   |   Update On 2026-01-27 13:18:00 IST
  • 'தமிழ்நாடு தலைகுனியாது' என்ற பிரசாரம் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட உள்ளது.
  • ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் இதற்காக ஒரு பொதுக்கூட்டம் நடத்திட வேண்டும்.

சென்னை:

தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 20-ந் தேதி நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் 'தமிழ்நாடு தலைகுனியாது' என்ற பிரசாரம் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட உள்ளது.

இந்த பிரசாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 நட்சத்திர பேச்சாளர்கள் தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் பிப்ரவரி மாதம் முழுவதும் தீவிர பிரசார பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்கள்.

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் இதற்காக ஒரு பொதுக்கூட்டம் நடத்திட வேண்டும். இவ்வாறு தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் பேசுபவர்கள் பட்டியலையும் தி.மு.க. பொதுச் செயலாளர் துரை முருகன் வெளியிட்டுள்ளார்.

Tags:    

Similar News