உள்ளூர் செய்திகள்

தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள். 

காசிவிஸ்வநாதர் கோவில் வைகாசி பிரமோற்சவ தேரோட்டம்

Published On 2022-06-08 16:38 IST   |   Update On 2022-06-08 16:38:00 IST
  • காசிவிஸ்வநாதர் கோவில் வைகாசி பிரமோற்சவ தேரோட்டம் நடைபெற்றது.
  • விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் வைகாசி பிரமோற்சவ விழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சிவகாசி

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் வைகாசி பிரமோற்சவ விழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்த பிரம்மோற்சவ விழா 11 நாட்கள் நடை பெறும். திருவிழாவில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி தாயார், பிரியாவிடை தாயுடன் ரிஷப வாகனம், குதிரைவாகனம், பூதவாகனம், காமதேனு வாகனம், பூஊஞ்சல் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி 4 ரத வீதி வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி காசி விசுவநாதர்-விசாலாட்சி அம்மன் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதனைத்தொடர்ந்து பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை விமரிசையாக நடைபெற்றது.

முன்னதாக பெண்கள் 4 ரத வீதிகளிலும் கோலமிட்டும், சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓத மேளதாளங்களுடன் 4 ரத வீதிகளிலும் விசுவநாதர்-விசாலாட்சி அம்மன்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News