உள்ளூர் செய்திகள்

வணிகவியல் துறை கருத்தரங்கில் பங்கேற்றவர்கள்.

காளீஸ்வரி கல்லூரி: வணிகவியல் துறை கருத்தரங்கம்

Published On 2022-09-12 07:35 GMT   |   Update On 2022-09-12 07:35 GMT
  • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் வ ணிகவியல் துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது.
  • 230 வணிகவியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

சிவகாசி

சிவகாசி காளீஸ்வரி கல்லூரி வணிகவியல் துறை சார்பில் ''விலை நிர்ணயம் என்பதே தொழில் முனைவோர் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணி'' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.

முதல்வர் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக போடிநாயக்கனூர்

சி.பி.ஏ. கல்லூரி, வணிகவியல் பேராசிரியர் சுஜாதா கலந்து கொண்டார். அவர் பேசுகையில், விலை நிர்ணயத்தின் யுக்திகள், விலை நிர்ணயத்திற்கான திட்டமிடல், விலை நிர்ணயத்தின் வகைகள்,எவ்வாறு விலை நிர்ணயம் செய்வது? எவ்வாறு இலாபம் மற்றும் நட்டம் இல்லாத விலையைக் கணக்கிடுவது? எந்த விலை நிர்ணயம் புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு உகந்தது? என்பது பற்றி எடுத்துரைத்தார்.

மேலும் அவர் அனைத்து மாணவர்களையும் சுயதொழில் தொடங்க ஊக்கப்படுத்தினார். ஜமுனா தேவி வரவேற்றார். ஜெயராசாத்தி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறைத்தலைவர் குருசாமி, முனைவர் பாபு பிராங்கிளின், ராஜீவ்காந்தி ஆகியோர் செய்திருந்தனர். இதில் 230 வணிகவியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Tags:    

Similar News