உள்ளூர் செய்திகள்

திருமண ஆசை காட்டி கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்ணிடம் 33 பவுன் மோசடி

Published On 2023-11-02 07:13 GMT   |   Update On 2023-11-02 07:13 GMT
  • திருமண ஆசை காட்டி கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்ணிடம் 33 பவுன் மோசடி செய்யப்பட்டுள்ளது.
  • இந்த சம்பவம் குறித்து அந்த பெண் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

ராஜபாளையம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டியை சேர்ந்தவர் மாலதி (வயது 32). இவர் முதல் கணவரை பிரிந்து 7 வயது மகனுடன் தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் இவருக் கும், ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகரை சேர்ந்த ராம் குமார் என்ற வாலிபருக்கும் தொடர்பு ஏற்பட்டது. அவரை திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து அவரிடம் இருந்து 33 பவுன் நகைகளை ராம்குமார் வாங்கி உள்ளார். அந்த நகைகளை தனியார் வங்கி யில் அடகு வைத்து பணம் பெற்றுள்ளார். 6 மாதங்கள் கடந்த பின்னரும் ராம்குமார் நகைகளை திரும்ப கொடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மாலதி, ராம்குமாரிடம் இதுகுறித்து கேட்டார். அப்போது அவர் சரியாக பதில் அளிக்கவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாலதி மதுரை ஐகோர்ட்டில் மாலதி மனு தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையின் போது ராம்குமார் கோர்ட் டில் ஆஜராகி முன்பணம் கொடுத்து விடுவதாகவும், 6 மாதம் கழித்து நகைகளை திரும்ப கொடுப்பதாகவும் கூறி உள்ளார். ஆனால் அவர் கூறியதுபோல் பணம், நகைகளை தரவில்லை. மேலும் வழக்கு வாய்தா வுக்கும் ஆஜராகவில்லை. இதையடுத்து தளவாய் புரம் போலீஸ் நிலையத்தில் மாலதி புகார் கொடுத்தார். சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News