வாயில் வடை சுட நாங்கள் என்ன DMK வா... - விஜய்
- மக்கள் பணத்தில் மக்களுக்கு செய்வதை இலவசம் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.
- மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான். அவர்களுக்காக கேள்வி கேட்பான்.
ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. பிரசார வாகனத்தில் ஏறிநின்று கையசைத்த விஜயை கண்டு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். இக்கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பேசியதாவது:-
* ஈரோட்டில் மட்டுமல்ல எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் அங்கும் பல பிரச்சனைகள் உள்ளன.
* ஒவ்வொரு மாவட்டங்களுக்குமான பிரச்சனையை எடுத்து பேசி வருகிறேன். இது அரசியல் கிடையாதா?
* மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுவது அரசியல் இல்லையா? இல்லை உங்களைப்போல அநாகரிகமாக பேச வேண்டுமா?
* நான் சலுகைகளுக்கு எதிரானவன் இல்லை, மக்கள் காசை மக்களுக்கு கொடுப்பது இலவசம் இல்லை.
* மக்கள் பணத்தில் மக்களுக்கு செய்வதை இலவசம் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.
* ஓசி ஓசி என்று மக்களை அசிங்கப்படுத்தினால் அதனை தட்டிக்கேட்க நான் வருவேன்.
* மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான். அவர்களுக்காக கேள்வி கேட்பான்.
* சொன்னா மட்டும் போதுமா? என கேட்கிறார்கள். நாங்கள் என்ன வாயிலேயே வடை சுட நாங்கள் என்ன தி.மு.க. வா...
* தி.மு.க. ஆட்சியில் பள்ளி இடைநிற்றல் அதிகரித்துள்ளது. 207 அரசு பள்ளிகள் மூடப்பட்டது யார் ஆட்சியில்?
* தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் சொந்தமாக வீடு உள்ளதா? அப்படி என்றால் வாடகை வீட்டில் யாரும் வசிக்கவில்லையா?
இவ்வாறு அவர் பேசினார்.