உள்ளூர் செய்திகள்
நியாய விலை கடை விற்பனையாளர் குடும்பத்துக்கு நிதியுதவி
- நியாய விலை கடை விற்பனையாளர் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
- இணைப்பதிவாளர் சுகந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை நடத்தும் சாத்தூரில் உள்ள நியாய விலை கடையின் விற்பனையாளராக பணிபுரிந்து வந்த ரத்தினம் மாலா என்பவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.
அவரது குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்ட ரூ.25 லட்சத்திற்கான காசோலையை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், விருதுநகர் மண்டல கூட்டு றவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில் குமார்,பொது விநியோகத்திட்ட துணைப்பதிவாளர் முருகவேல், பொது விநியோகத் திட்ட கூட்டுறவு சார்பதிவாளர் விநாயகரசன், இணைப்பதிவாளர் சுகந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.