உள்ளூர் செய்திகள்

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

Published On 2022-06-18 14:18 IST   |   Update On 2022-06-18 14:18:00 IST
  • விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 21-ந் தேதி நடக்கிறது.
  • கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட பொதுவான கோரிக்கைகளை சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்களிடம் நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- விருதுநகர் மாவட்டம் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்களில் வருகிற 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி அளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அந்தந்த கோட்டாட்சியர்கள் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.

இதில் விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட பொதுவான கோரிக்கைகளை சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்களிடம் நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News