உள்ளூர் செய்திகள்

காதல் திருமணம் செய்தவருக்கு கொலை மிரட்டல்; 14 பேர் மீது வழக்கு

Published On 2022-12-20 13:55 IST   |   Update On 2022-12-20 13:55:00 IST
  • காதல் திருமணம் செய்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
  • சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை ரோடு பகுதியை சேர்ந்தவர் மதன் (24). இவர் உறவினர்களின் எதிர்ப்பை மீறி வேறு இனத்தை சேர்ந்த காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் மனைவியுடன் திருமணம் ஒன்றிற்கு சென்றுள்ளார்.

அங்கிருந்த உறவினர்கள் ஜெயபாலன், சுந்தரமகாலிங்கம், காளியப்பன், ஆனந்த், கணேசன் மற்றும் 9 பேர் மதனை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மதன் வழக்கு தொடர்ந்தார். கோர்ட் உத்தரவின் பேரில் சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News