வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிட்டங்கியில், அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் மேகநாதரெட்டி ஆய்வு செய்தார்.
வாக்குப்பதிவு எந்திர கிட்டங்கியில் கலெக்டர் ஆய்வு
- வாக்குப்பதிவு எந்திர கிட்டங்கியில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
- வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்த்து தேர்தல் ஆணைய உத்தரவின் பேரில் பெங்களளூருவில் உள்ள பெல் நிறுவனத்திற்கு அனுப்பும் வகையில் திறக்கப்பட்டது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வாக்குபதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள கிட்டங்கியில், அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் மேகநாதரெட்டி ஆய்வு செய்தார்.
வாக்குபதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள கிட்டங்கியில் 411 வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை எந்திரங்கள் பணிக்காவும் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது பழுதடைந்த 38 வாக்குப்பதிவு கட்டுப்பாடு எந்திரங்கள் மற்றும் 36 வாக்குப்பதிவு எந்திரங்களையும், 68 வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை எந்திரங்கள் ஆக மொத்தம் 553 வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்த்து தேர்தல் ஆணைய உத்தரவின் பேரில் பெங்களளூருவில் உள்ள பெல் நிறுவனத்திற்கு அனுப்பும் வகையில் திறக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் மங்களராமசுப்பிரமணியன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) காளிமுத்து, தனிவட்டாட்சியர் (தேர்தல்) மாரிசெல்வி மற்றும் அரசு அலுவலர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.