வங்கி பெண் மேலாளரை தாக்கி கொலை மிரட்டல்
- வங்கி பெண் மேலாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
- ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் செயல்படும் ஒரு வங்கியில் மேலாளராக பணியாற்றி வருபவர் நர்மதா (வயது 33). இந்த வங்கியில் கடந்த 8.11.2013 அன்று ராஜபாளையத்தைச் சேர்ந்த முருகேஷ் என்பவர், தனது மகன் விக்னேஷ் படிப்பதற்காக ரூ. 2 லட்சம் கல்விக்கடன் வாங்கியுள்ளார். அதனை முறையாக திருப்பி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து மேலாளர் நர்மதா மற்றும் கிளை மேலாளர் சண்மு கப்பிரியா, வங்கி ஊழியர் சுப்புராஜ் ஆகியோர் முருகேஷ் வீட்டுக்கு சென்று கல்வி க்கடன் தொகையை திருப்பி செலுத்தும்படி கேட்டுள்ளனர்.
அப்போது அங்கிருந்த முருகேசின் உறவினர் ஒருவர் வங்கி மேலாளர் உள்ளிட்ட 3 பேரிடமும் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும் வங்கி மேலாளர், நர்மதாவை தகாத வார்த்தையால் பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுபற்றிய புகாரின் பேரில் ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.