உள்ளூர் செய்திகள்

வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு

Update: 2022-07-03 11:52 GMT
  • இணையதளம் மூலம் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீட்டில் கலெக்டர் பங்கேற்றார்.
  • அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் மேகநாதரெட்டி ஒதுக்கீடு செய்தார்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்டரங்கில் வத்திராயிருப்பு (வார்டு எண். 2) மற்றும் வ.புதுப்பட்டி (வார்டு எண். 7) பேரூராட்சிகளில் காலியாக உள்ள வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு சாதாரண தற்செயல் தேர்தல்கள் நடைபெற உள்ளன.

இதையடுத்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய கால அட்டவணையின்படி, தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வழங்குவதற்காக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதளம் மூலம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் மேகநாதரெட்டி ஒதுக்கீடு செய்தார்.

ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் விருதுநகர் நகராட்சி அலுவலகத்திற்கு பின்புறம் நாராயணமடம் தெருவில் உள்ள சமுதாயக் கூடத்தில் இருந்து வத்திராயிருப்பு மற்றும் வ.புதுப்பட்டி பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய கால அட்டவணையின்படி, வருகிற 5-ந் தேதி வாக்குச்சாவடிகளுக்கு ஒதுக்கீடு செய்வதற்கான 3-ம் கட்ட பணிகள் வேட்பாளர்கள் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர்களால் மேற்கொள்ளப்படும்.

மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்தார்.

Tags:    

Similar News