உள்ளூர் செய்திகள்
- விருதுநகரில் 750 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
- இது சம்பந்தமாக டிரைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்
சிவகாசி அருகே உள்ள ஆலங்குளம் பகுதியில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை மறித்து சோதனையிட்டபோது, 750 கிலோ ரேசன் அரிசி கடத்துவது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் ரேசன் அரிசியை கடத்திய கோவில்பட்டியை சேர்ந்த கொம்பையா, மந்திரமூர்த்தி, டிரைவர் செல்லத்துரை ஆகிய 3 பேரை கைது செய்தனர்.