கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்
- கலெக்டர், எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்
- கோமாரி மற்றும் அம்மை தடுப்பூசி போடப்பட்டது
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த நஞ்சுண்டாபுரத்தில் கால்நடை பராமரிப்புதுறை மற்றும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சார்பில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடந்தது.
ஊராட்சி மன்ற தலைவர் சீதா தமிழ்செல்வன் தலைமை தாங்கினார்.
கணியம்பாடி ஒன்றிய குழு தலைவர் திவ்யாக மல்பிரசாத், துணை தலைவர் கஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் தேவி சிவா, தி.மு.க. ஒன்றிய செயலாளர் கலைச்சந்தர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜன்பாபு, கவுரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற துணை தலைவர் கன்னியப்பன் வரவேற்றார்.
முகாமின் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மற்றும் ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பேசினர்.
இதில் கலந்து கொண்ட 200-க்கும் மேற்பட்ட, கால்நடைகளுக்கு கோமாரி மற்றும் அம்மை தடுப்பூசி போடுதல், குடற்புழு நீக்கும் மருந்து வழங்குதல், சினை நிற்காத கால்நடைகளுக்கு மலட்டுத்தன்மை நீக்குதல் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.