உள்ளூர் செய்திகள்
ஆட்டோவில் பெண் தவறவிட்ட பணத்தை ஒப்படைத்த டிரைவர்
- செல்போன் மற்றும் மணிபர்ஸ் மறந்து விட்டார்
- போலீசார் டிரைவரை பாராட்டினர்
குடியாத்தம்:
குடியாத்தம் அடுத்த கள்ளூர், ஜெமினி நகரை சேர்ந்தவர் ஜெயவேலு (வயது 30) ஆட்டோ டிரைவர்.
இவர் நேற்று குடியாத்தம் பஸ் நிலையத்தில் இருந்து பிச்சனூர் பகுதிக்கு பெண் ஒருவரை ஏற்றி சென்றார்.
அந்த பெண் பலமநேர் சாலை அரசமரம் அருகே இறங்கி சென்றார். இதனையடுத்து ஜெயவேலு வேறு இடத்திற்கு சவாரிக்கு சென்றார்.
அப்போது ஜெயவேல் திடீரென ஆட்டோவில் திரும்பி பார்த்தபோது, பெண் செல்போன் மற்றும் மணிபர்ஸ் தவறவிட்டு சென்றது தெரிந்தது. பின்னர் ஜெயவேலு செல்போன் மற்றும் மணிபர்சை குடியாத்தம் டவுன் போலீசில் ஒப்படைத்தார்.
போலீசார் செல்போன் மற்றும் பணத்தை தவறவிட்ட, பிச்சனூர் பகுதியை சேர்ந்த லாவண்யாவிடம் ஒப்படைத்தனர். பயணி தவறவிட்ட பொருட்களை திரும்ப ஒப்படைத்த ஆட்டோ டிரைவரை பாராட்டினர்.