உள்ளூர் செய்திகள்
ராகுல் காந்தியின் மேல் முறையீட்டு வழக்கு தள்ளுபடி வேலூரில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்
- 25 பேர் கைது
- தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்
வேலூர்:
முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியது. இந்த வழக்கில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்து இருந்தார். இந்த மேல் முறையிட்டு வழக்கை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இதனைக் கண்டித்து வேலூர் காங்கிரசார் மாநகர மாவட்ட தலைவர் டீக்காராமன் தலைமையில் இன்று அண்ணா சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மறியலில் ஈடுபட்ட காங்கிரசார் 25 பேரை இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன் பேபி மற்றும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
மறியல் போராட்டத்தில் மாநில எஸ்.சி., எஸ்.டி. பிரிவு பொதுச் செயலாளர் சித்தரஞ்சன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் வாஹித் பாஷா, மண்டல தலைவர்கள் ரகு, மனோகரன், அசோக் குமார் முகமது அலி ஜின்னா உள்பட பலர் கலந்து கொண்டனர்.