உள்ளூர் செய்திகள்
பள்ளிகொண்டாவில் மணல் கடத்தி வந்த லாரி சிறைப்பிடிப்பு
- வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக புகார்
- போலீசார் தடுக்க வலியுறுதத்ல்
அணைக்கட்டு:
பள்ளிகொண்டா அருகே உள்ள வெட்டுவாணம் பாலாற்று பகுதியில் இருந்து லாரியில் 2 யூனிட் மணல் திருட்டுத்தனமாக அள்ளிக்கொண்டு கட்டுப்படி சாலை வழியாக நேற்று இரவு சென்றது.
இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் லாரியை சிறை பிடித்தனர். இரவு நேரங்களில் மணல் கடத்தி வரும் லாரிகள் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனை போலீசார் முற்றிலுமாக தடுக்க வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த லாரியின் உரிமை யாளர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் இனிமேல் இந்த பகுதி வழியாக மணல் எடுத்து வரமாட்டேன் என உறுதி அளித்தார்.
இதை அடுத்து லாரி விடுவிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.