உள்ளூர் செய்திகள்

ஊத்தங்கரை பேருந்து நிலையத்தில் உள்ள சுத்தகரிப்பு குடிநீர்மையம் பயன்பாட்டுக்கு வராமல் காட்சி பொருளாக காணப்படுகிறது.

ஊத்தங்கரை பேருந்து நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை

Published On 2022-07-14 15:35 IST   |   Update On 2022-07-14 15:35:00 IST
  • ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் கட்டப்பட்டது.
  • பொதுமக்கள் குடிநீர் தேவைக்காக அங்குள்ள கடைகளில் சென்று கேட்டு பருகி வருவதாக சமூக ஆர்வலர்கள் புலம்புகின்றனர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேருந்து நிலையத்தில் பயணிகளின் குடிநீர் தேவைக்காக 2018 -19 ஆம் ஆண்டு ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் கட்டப்பட்டது.

குடிநீர் பைப்புகள் அமைக்கப்பட்டும் முழுமையான பணி முடிந்து மூன்று ஆண்டுக்கு மேல் ஆகியும் இந்த சுத்திகிரிக்கப்பட்ட குடிநீர் மையம் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை.

இதனால் பேருந்தில் பயணம் செய்ய வரும் பொதுமக்கள் குடிநீர் தேவைக்காக அங்குள்ள கடைகளில் சென்று கேட்டு பருகி வருவதாக சமூக ஆர்வலர்கள் புலம்புகின்றனர்.

இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் பேருந்து நிலையத்திற்கு வரும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்பெறுவர்.

இவை பயன்பாட்டில் இல்லாத காரணத்தினால் ஏழை எளிய பொதுமக்கள் வெயில் காலங்களிலும் மழைக் காலங்களிலும் குடிநீருக்காக தவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தப் பேருந்து நிலையத்தில் மக்கள் குடிநீர் வசதிக்காக அரசு நிதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த குடிநீர் மையத்தை புதிதாக பொறுப்பேற்ற பேரூராட்சி நிர்வாகம் மக்கள் பயன்பாட்டுக்கு உடனடியாக கொண்டு வர வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags:    

Similar News