பெல் நிறுவன அதிகாரி வீட்டில் திருடிய வாலிபர் கைது
- சொந்த ஊரான வாசுதேவநல்லூருக்கு குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு சென்றார்.
- தங்கநகை மற்றும் வெள்ளி சாமான்களை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.
திருவெறும்பூர்
திருவெறும்பூர் அருகே உள்ள பெல் டவுன்ஷிப் பகுதியை சேர்ந்தவர் சங்கரன். இவரது மகன் துரைராஜ் (வயது 37) .இவர் பெல் நிறுவனத்தில் கெமிக்கல் டிபார்ட்மெண்டில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி சொந்த ஊரான வாசுதேவநல்லூருக்கு குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு சென்றார். இந்நிலையில் அவரது வீட்டை உடைத்து வீட்டில் பீரோவில் இருந்த தங்கநகை மற்றும் வெள்ளி சாமான்களை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து துரைராஜ் பெல் காவல் நிலையத்தில் கடந்த 24-ந் தேதி புகார் செய்தார்.
இதன் பேரில் பெல் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர். இந்த நிலையில் வாழவந்தான் கோட்டையை சேர்ந்த சார்லஸ் (36) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்த போது துரைராஜ் வீட்டில் கொள்ளை அடித்ததை ஒத்துக் கொண்டார். அவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 5 1/2 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை பெல் போலீசார் பறிமுதல் செய்தனர். சார்லசை திருச்சி 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.