பைனான்ஸ் அதிபரிடம் ரூ.25 லட்சம் மோசடி
- பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியுள்ளனர்
- ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்க மறுத்துள்ளார்.
திருச்சி
திருச்சி தெற்கு தாராநல்லூர் சிவசக்தி மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மகன் நந்தகுமார் (வயது 37). பைனான்ஸ் அதிபர்.
இவரிடம் திருச்சி மாவட்டம் லால்குடி நன்னிமங்லத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி பிரதீபா ஆகியோர் அணுகினர்.
பின்னர் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என அவர்கள் கூறியுள்ளனர். இதை நம்பிய நந்தகுமார், கணவன், மனைவி இருவரிடமும் ரூ.25 லட்சம் கொடுத்துள்ளார்.
பின்னர் எந்த லாபத் தொகையும் அவர்கள் கொடுக்காததால், நந்தகுமார் தான் கொடுத்த பணத்தை அவர்களிடம் திரும்ப கேட்டார். ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்க மறுத்துள்ளார்.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நந்தகுமார், இது குறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுலோச்சனா கணவன், மனைவி ஆகிய 2 பேர் மீதும் மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.