தொழிலாளியை கொல்ல முயன்ற ரவுடி குண்டர் சட்டத்தில் கைது
- கொலை வழக்கு ஒன்று உட்பட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
- அதை தொடர்ந்து சுரேஷ் குண்டர் சட்டத்தின் கீழ் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
திருச்சி
ஸ்ரீரங்கம் சிங்கர் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் என்ற ஆட்டுக்குட்டி சுரேஷ்(வயது 32). பிரபல ரவுடியான இவர் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் அடிதடியில் ஈடுபட்டதாக 5 வழக்குகளும், கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக ஒரு வழக்கும், கொலை வழக்கு ஒன்று உட்பட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் சுரேஷ் அதே பகுதியை சேர்ந்த படையப்பா என்பவருடன் சேர்ந்து பணம் கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம் காரணமாக பூக்கடையில் வேலை செய்யும் தொழிலாளியை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றனர்.
இதுபற்றி அந்த தொழிலாளி கொடுத்த புகாரின்பேரில் ரவுடி சுரேஷ், படையப்பா ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர். இதில் ரவுடி சுரேஷ் தொடர்ந்து பொது அமைதிக்கு தொந்தரவு செய்துவந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிசனருக்கு ஸ்ரீரங்கம் இன்ஸ்பெக்டர் பரிந்துரை செய்தார். அதை ஏற்று ரவுடி சுரேசை குண்டர் சட்டத்தில் சிரையில் அடைக்க திருச்சி மாநகர போலீஸ் கமிசனர் காமினி உத்தரவிட்டார். அதை தொடர்ந்து சுரேஷ் குண்டர் சட்டத்தின் கீழ் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.