உள்ளூர் செய்திகள்

போலி ஆவணம் தயாரித்து ரியல் எஸ்டேட் புரோக்கரிடம் ரூ.15 லட்சம் மோசடி

Published On 2023-10-28 09:08 GMT   |   Update On 2023-10-28 09:08 GMT
  • இவர் பெரியசாமி என்பவரிடம் நிலம் வாங்க வேண்டும் என கூறியுள்ளார்.
  • யாருக்கும் பவர் பத்திரம் செய்து கொடுக்கவில்லை என்பது தெரிய வந்தது

திருச்சி

திருச்சி அமராவதி தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாபுராஜ் (வயது 67). ரியல் எஸ்டேட் புரோக்கர்.இவர் பெரியசாமி என்பவரிடம் நிலம் வாங்க வேண்டும் என கூறியுள்ளார். இதை அடுத்து அவர் திருச்சி கே.சாத்தனூர் கவி பாரதி நகரில் உள்ள பர்மா அகதிக்கு சொந்தமான ஒரு இடத்தை காண்பித்துள்ளார்.

அந்த இடம் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 1200 சதுர அடி இடம் ஆகும். இந்த நிலத்தை சங்கர் என்பவருக்கு பவர் பத்திரம் செய்து கொடுத்துள்ளதாக கூறியுள்ளனர்.பின்னர் பாபுராஜிடம் ரூ.15 லட்சம் வாங்கிக் கொண்டு அந்த நிலத்தை அவரது பெயருக்கு போலியான ஆவணங்கள் மூலம் கே.சாத்தனூர் சப்ரி-ஜிஸ்டர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்துள்ளனர். பின்னர் விசாரித்த போது அந்த நிலம் பர்மா அகதியான காளி என்பவரது பெயரில் தான் இருக்கிறது.

யாருக்கும் பவர் பத்திரம் செய்து கொடுக்கவில்லை என்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் பாபுராஜ் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி வழக்கு பதிவு செய்து திருச்சி கே.கே. நகர் கே. சாத்தனூர் கவி பாரதி நகரை சேர்ந்த சங்கர் (வயது 56 )என்பவரை கைது செய்தார் மேலும் இது தொடர்பாக மதியழகன், புவனேஸ்வரி பெரியசாமி, தியாகராஜன் உள்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News