உள்ளூர் செய்திகள்

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பஸ்சில் தூங்கிய கண்டக்டரின் பணப்பை திருட்டு

Published On 2023-10-31 14:33 IST   |   Update On 2023-10-31 14:33:00 IST
  • பணத்தை எண்ணி தனது பேக்கில் வைத்துக் கொண்டு பஸ்ஸில் இரவு படுத்து தூங்கினார்.
  • அருகாமையில் வைத்திருந்த பணப்பையை காணாமல் திடுக்கிட்டார்.

திருச்சி

வேலூரில் இருந்து பய ணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு அரசு பஸ் திருச்சி நோக்கி புறப்பட்டது. இந்த பஸ்சில் ராணிப்பேட்டை களத்தூர் பஜனை கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த சுந்தரம் (வயது 43) என்பவர் கண்டக்டராக பணியாற்றி னார்.

இந்த பஸ் நள்ளிரவு 3 மணி அளவில் திருச்சி மத் திய பஸ்நிலையம் வந்தது. பின்னர் பயணிகள் அனை வரும் இறங்கிய பின்னர் கண்டக்டர் கணக்கு வழக்கு களை சரி பார்த்துக் கொண்டு பணத்தை எண்ணி தனது பேக்கில் வைத்துக் கொண்டு பஸ்ஸில் இரவு படுத்து தூங்கினார்.

பின்னர் காலை 6 மணிக்கு எழுந்து பார்த்த போது அருகாமையில் வைத்திருந்த பணப்பையை காணாமல் திடுக்கிட்டார். அந்த பணப்பையில் ரூ. 15 ஆயிரத்து 799 பணம் மற்றும் ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்து 688 மதிப்புள்ள பஸ் டிக்கெட்டுகள், டிக்கெட் வழங்கும் எந்திரம், சார்ஜர் ஆகியவை இருந்தது.

இதுகுறித்து சுந்தரம் கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வீரசோலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News