உள்ளூர் செய்திகள்

நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த ரூ.90 லட்சம் நிதி ஒதுக்கீடு

Published On 2022-08-02 07:29 GMT   |   Update On 2022-08-02 07:29 GMT
  • நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த ரூ.90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
  • வாரத்திற்கு 60 கர்ப்பிணிகள் பரிசோதனைக்காக வருகிறார்கள்

திருச்சி:

திருச்சி தில்லை நகர் காந்திபுரம் பகுதியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இதனை மாநகராட்சியின் 11, 22, 23 ஆகிய வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு தினமும் 200-க்கும் மேற்பட்டவர்கள் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

வாரத்திற்கு 60 கர்ப்பிணி பெண்கள் வரை பரிசோதனைக்காக வருகிறார்கள். இதில் பிரசவ வார்டுகளும் உள்ளன. இந்தப் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட தனியார் ஆஸ்பத்திரிகள் இருந்தாலும் ஏழை, எளிய மக்கள் இந்த நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை பெரிதும் நம்பியுள்ளனர். ஆனால் போதிய இடவசதிகள் இல்லாமல் இருந்தது.

இதையடுத்து தற்போது காந்திபுரம் சுகாதார நிலையத்தை மேம்படுத்த மாநகராட்சி ரூ.90 லட்சம் நிதி ஒதுக்கி உள்ளது. மேம்படுத்தப்படுகிறது. பிரசவ வார்டுகளிலும் படுக்கைகள் அதிகப்படுத்தப்பட உள்ளன. இதன் மூலம் தரைத்தளத்தை மேலும் 800 சதுர அடிக்கு விரிவாக்கம் செய்ய இருக்கின்றோம். ஙமேலும் முதல் தளத்தில் 1,800 சதுர அடிக்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட உள்ளது.

புதிய கழிப்பட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இந்த கட்டுமான பணிகள் இன்னும் ஆறு மாதங்களில் பூர்த்தி அடைய இருக்கிறது. குறிப்பாக கர்ப்பிணி தாய்மார்கள் ரத்தப் பரிசோதனை மற்றும் இதர ஆய்வக பரிசோதனைகளுக்காக பிரத்தியேக இடம் ஒதுக்கப்பட இருக்கிறது என மாநகராட்சி என்ஜினீயர் ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News