உள்ளூர் செய்திகள்

வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் வங்கி ஊழியர்களுக்கு பயிற்சி முகாம்

Published On 2023-09-09 14:49 IST   |   Update On 2023-09-09 14:49:00 IST
  • சிறப்பாக செயல்பட்ட வங்கிகளுக்கு தனி துணை ஆட்சியர் கேடயம் வழங்கி பாராட்டு
  • ரிசர்வ் வங்கி, நபார்டு வங்கியின் உதவி பொது மேலாளர்கள், மாவட்ட தொழில்மையம், தாட்கோ மற்றும் வங்கி மேலாளர்கள் பங்கேற்பு

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி பிங்கர்போஸ்ட் கூடுதல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் அனைத்து வங்கியாளர்களுக்கான இணை மானிய நிதி திட்ட விளக்க பயிற்சி முகாம் நடந்தது. இதில் மாவட்ட செயல்அலுவலர்ரமேஷ்கிருஷ்ணன் பங்கேற்று பயிற்சி அளித்தார்.

மேலும் சிறப்பாக செயல்பட்ட வங்கிகளுக்கு தனி துணை ஆட்சியர் கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் ரிசர்வ் வங்கி மற்றும் நபார்டு வங்கியின் உதவி பொது மேலாளர்கள், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், மாவட்ட தொழில்மைய மேலாளர், தாட்கோ மேலாளர், வங்கி மேலாளர்கள் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்ட அலுவலர்கள் உள்பட அனைவரும் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News