உள்ளூர் செய்திகள்

ஓணம் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

Published On 2023-08-30 14:25 IST   |   Update On 2023-08-30 14:25:00 IST
  • சாரல் மழையில் நனைந்தபடி இயற்கை காட்சிகளை ரசித்தனர்.
  • ஊட்டியில் கனமழை காரணமாக படகு இல்லத்தில் தற்காலிகமாக சவாரி நிறுத்தப்பட்டது

ஊட்டி,

ஓணம் பண்டிகை விடுமுறையையொட்டி ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நேற்று அதிகரித்து இருந்தது. பொதுவாக கேரளா, கர்நாடக மாநிலங்களில் பண்டிகை விடுமுறை வந்தால் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் திரண்டு வருவர்.

கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகைக்காக 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள நிலையில், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து உள்ளது. அதேபோல கர்நாடக மாநிலத்தில் தசரா பண்டிகை விடுமுறையின் போதும் எண்ணற்றோர் ஊட்டிக்கு வந்து செல்வர்.

கேரளாவில் நேற்று ஓணம் பண்டிகை என்பதால் அங்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. எனவே ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து இருந்தது. அவர்கள் நேற்று கூட்டம்-கூட்டமாக ஊட்டிக்கு வந்தவண்ணம் இருந்தனர்.

எனவே ஊட்டியில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் உட்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது. முன்னதாக பெரும்பாலான லாட்ஜ் மற்றும் காட்டேஜ் பகுதி களில் பயணிகள் நிரம்பி வழிந்தனர். கேரள மாநில சுற்றுலா பயணிகள் வருகை யால் பெரும்பாலான ஓட்டல்களில் ஓணம் நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

கேரள மாநிலத்தில் இருந்து இன்றும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊட்டியில் தாவரவியல் பூங்கா உட்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் பயணிகள் வருகை அதிகரித்து உள்ளதால், அங்குஉள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இதற்கிடையே நீலகிரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை முதலே வானில் கரும் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. குறிப்பாக உதகை, குன்னூா் ஆகிய பகுதிகளில் உள்ள தாவரவியல் பூங்கா, டால்பின்னோஸ், லேம்ஸ் ராக் உள்ளிட்ட காட்சி முனை ஆகிய பகுதியில் மதிய நேரத்தில் பரவலாக சாரல் மழை பெய்தது. இதனால் அங்கு குளிா்ந்த கால நிலை நிலவியது.

எனவே சுற்றுலா பயணிகள் சாரல் மழையில் நனைந்தபடியும் குடையை பிடித்தவாறும் குடும்பத்துடன் சென்று அங்கு உள்ள சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்தனா். மேலும் சாலைகளில் அவ்வப்போது மூடுபனி காணப்பட்டதால் வாகனங்கள் பகல் நேரத்திலும் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு சென்றன.

ஊட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காலை 11 மணி முதல் சுமார் 2 மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் அங்கு கடும் குளிர் நிலவி வரு கிறது. ஊட்டியில் கனமழை காரணமாக ஊட்டி படகு இல்லத்தில் தற்காலிகமாக படகு சவாரி நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு படகு சவாரி செய்வதற்காக திரண்டு வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Tags:    

Similar News