உள்ளூர் செய்திகள்

மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மேலப்பாளையம், புதிய பஸ் நிலைய பகுதிகளில் நாளை மின் தடை

Published On 2023-06-12 14:37 IST   |   Update On 2023-06-12 14:37:00 IST
  • மேலப்பாளையம் துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
  • கொங்கந்தான்பாறை உள்ளிட்ட இடங்களில் நாளை மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

நெல்லை:

நெல்லை மின்வாரிய செயற்பொறியாளர் (நகர்புற விநியோகம்) முத்துக்குட்டி வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியுள்ளதாவது:-

மேலப்பாளையம் துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான மேலப்பாளை யம் கொட்டிகுளம் பஜார், அம்பை ரோடு, சந்தை, குலவணிகர்புரம், பாளை மத்திய சிறைச்சாலை பகுதி, மாசிலாமணிநகர், வீரமாணிக்கபுரம், ஆமிம்புரம், மேலப்பாளையம்- டவுன் ரோடு,

கணேசபுரம், மேல கருங்குளம், முன்னீர்பள்ளம், ஆரைக்குளம், தருவை, ஒமநல்லூர், பொறியியல் கல்லூரி பகுதி, புதிய பஸ் நிலையம், ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள்புரம், பெருமாள்புரம், பொதிகை நகர், திருமால்நகர், கண்டித்தான்குளம், கொங்கந்தான்பாறை, பொன்னாக்குடி, அடைமி திப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி, தாமரைச்செல்வி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News