திருவண்ணாமலை அடுத்த கொழப்பலூர் ஊராட்சியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் அரவிந்தர் வேளாண்மை கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப் பட்ட போது எடுத்த படம்.
கால்நடை மருத்துவமனையில் மாணவிகள் பயிற்சி
- தினசரி சிகிச்சை குறித்து விளக்கம்
- முக்கிய குறிப்புகள் எடுத்துக் கொண்டனர்
திருவண்ணாமலை:
கலசப்பாக்கம் அரவிந்தர் வேளாண்மை அறிவில் தொழில் நுட்பக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கிராமாற வேளாண்ளாக அனுபவ பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி கொழப்பலூர் ஊராட்சியில் உள்ள கால்நடை மருத்துவ மனையில் பயிற்சிக்காக சென்று இருந்தனர் எப்போது கால்நடை மருத்துவர் சுரேஷ் கால்நடைகளுக்கான தினசரி சிகிச்சை அளித்தல் மற்றும் ஆடுகளுக்கான அஜீரணக் கோளாறு, முடக்குவாதம், பசு மாடுகளுக்கான செயற்கைமுறை கருத்தரித்தல் மற்றும் வெறிநாய்கடி நோய் தடுப்பூசி போடுதல் ஆகிய பல சிகிச்சைகளையும் அவைகளுக்கான மருந்துகளையும் பற்றி நேரடியாக செய்முறை விளக்கம் கொடுத்தார்.
இதனை கலசப்பாக்கம் அரவிந்தர் வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்கும் இறுதியாண்டு மாணவிகள் அறிந்து கொண்டு குறிப்புகளையும் எடுத்துக் கொண்டனர்.