உள்ளூர் செய்திகள்
படவேடு கோவிலில் போத்ராஜா கல்யாணம் நடந்த காட்சி.
படவேடு கோவிலில் போத்ராஜா கல்யாணம்
- மகாபாரத அக்னி வசந்த விழா நடந்தது
- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த படவேடு வீரகோவில் பகுதியில் திரவுபதியம்மன் கோவிலில் கடந்த வாரம் தொடங்கி மகாபாரத அக்னி வசந்த விழா நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு தினமும் பிற்பகல் கோவில் வளாகத்தில் மகாபாரத சொற்பொழிவு நடக்கிறது.
நேற்று முன்தினம் இரவு மகாபாரதக் கதையில் பீமனின் மகனான போத்ராஜா கல்யாணம் நடைபெற்றது. இதேபோல் நேற்று இரவில் திரவுபதியம்மன் கல்யாணம் நடைபெற்றது.