உள்ளூர் செய்திகள்

ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மத்திய அரசு தரச்சான்றிதழ்

Published On 2022-12-30 09:45 GMT   |   Update On 2022-12-30 09:45 GMT
  • கூடுதல் படுக்கை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்
  • மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை

திருவண்ணாமலை:

தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் அடிப் படை வசதிகள், பராமரிப்பு குறித்து மத்திய அரசின் சுகாதார குழுவினர் கடந்த நவம்பர் மாதம் முதல் டிசம்பர் 5ம்தேதி வரை ஆய்வு செய்தனர். அதன்படி கிருஷ்ணகிரி, மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருப்பத்தூர். திருவண்ணாமலை, தர்மபுரி, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய 9 மாவட்டங்களில் 14 ஆரம்ப சுகாதார நிலையங்களை மத்திய அரசின் சுகாதார குழுவினர் ஆய்வு செய்தனர்.

இதில் கலசப்பாக்கம் அடுத்த மேல்வில்வ ராயநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நவம்பர் மாதம் குஜராத் மாநிலத்தை சேர்ந்த டாக்டர் வியாஸ், சிக்கிம் மாநிலத்தை சேர்ந்த மிக்கியா லெப்சான் கொண்ட மருத்துவ க்குழுவினர்

ஆய்வு செய்து அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தனர். இதில் 93.46 மதி

ப்பெண்கள் பெற்று மேல்வில்வ ராயநல்லூர் சுகாதார நிலையம் முதலிடம் பெற்றது.

இங்கு அடிப்படை வசதிகள், தரமான சிகிச்சை, நோயாளிகள் பராமரிப்பு உள்ளிட்டவற்றில் சிறப்பான செயல்பாடு உள்ளதாக தேசிய தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த அறிக்கை மத்திய அரசு மூலம் மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

பின்னர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரத்த வங்கி, கூடுதல் கட்டிடம், அறுவை சிகிச்சை மையம், கூடுதல் படுக்கை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படஉள்ளது.

இந்த சுகாதார நிலையத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி பல்வேறு வசதிகள் செய்து தருவதன் மூலம் மேல்வில்வராயநல்லூர். மேலாரணி, சேங்கபுத்தேரி, மோட்டூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறுவார்கள். தனி யார் மருத்துவமனைக்கு இணையாக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கவேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

Tags:    

Similar News