உள்ளூர் செய்திகள்

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் குழந்தை.

4 வயது குழந்தையை வெறிநாய் கடித்து குதறியது

Published On 2023-03-06 15:38 IST   |   Update On 2023-03-06 15:38:00 IST
தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது பரிதாபம்

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 33 வார்டுகள் உள்ளன.

இதில் அருணகிரிசத்திரம் பகுதியை சேர்ந்த நெசவு தொழிலாளி தினகரன் இந்துமதி தம்பதினயினரின் 4வயது ஆண் குழந்தை ஹோம்நாத் தெருவில் சக குழந்தைகளுடன் விளையாடி கொண்டிருந்தார்.

அப்போது தெருவில் சுற்றி திரிந்த வெறிநாய் திடிரென 4 குழந்தைகளையும் கடிக்க முயன்றது. அப்போது குழந்தைகள் அலறல் சத்தத்துடன் ஓட்டம் பிடித்தனர்.

இதில் மற்ற குழந்தைகளும் லேசான காயத்துடன் தப்பினார்கள். 4 வயது குழந்தை ஹோம்நாத் தரையில் விழுந்ததால் வெறிநாய் தொடை கை கால் உள்ளிட்ட பகுதிகளில் கடித்து குதறியது.

இதில் படுகாயமடைந்த குழந்தை ஹோம்நாத் ஆரணி அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றான். ஆரணி நகராட்சியில் வெறிநாய் குழந்தைகள் முதியவர்களை கடித்து குதறும் நிலைமை தொடர்கதையாக உள்ளது.

இது சம்மந்தமாக நகராட்சி நிர்வாகம் வெறிநாய்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்து வேண்டும் என பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News