பா.ஜ.க., செயற்குழு கூட்டம் நடைபெற்ற காட்சி.
உடுமலை நகர பா.ஜ.க., செயற்குழு கூட்டம்
- புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
- பா.ஜ.க. தலைவர் கண்ணாயிரம் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
மடத்துக்குளம் :
திருப்பூர் தெற்கு மாவட்டம் உடுமலை நகர பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் உடுமலை நகர பா.ஜ.க. தலைவர் கண்ணாயிரம் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்டத்தலைவர் மங்களம் என். ரவி , திருப்பூர் தெற்கு மாவட்ட பார்வையாளரும் மாநில செயலாளருமான மலர்கொடி மற்றும் மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் உடுமலை நகர்மன்ற தலைவருமான ஜோதீஸ்வரி கந்தசாமி , மாவட்ட ஓ.பி.சி. அணி பொதுச்செயலாளர் குட்டியப்பன் மற்றும் மாவட்ட பொதுச்செயலாளர்கள் வடுகநாதன் மற்றும் குருபிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவர் பெரியசாமி, மாவட்ட செயலாளர் ராஜா, ஈரோடு பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் விஸ்வநாதன், உடுமலை நகர பொதுச்செயலாளர்கள் சீனிவாசன், சிவசங்கர் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய கிளை, அணி,பிரிவு தலைவர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநில துணைத்தலைவர் மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட பார்வையாளர் மலர்க்கொடி, திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி ,மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதீஸ்வரி கந்தசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் விஜயராகவன், மாநில ஓ.பி.சி. அணி பொதுச்செயலாளர் குட்டியப்பன், திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் வடுகநாதன், திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் குரு பிரசாத்,உடுமலை நகர தலைவர் கண்ணாயிரம் ,உடுமலை நகர பொதுச்செயலாளர்சீனிவாசன்,உடுமலை நகர பொதுச்செயலாளர் சிவசங்கர்,உடுமலை நகர பொருளாளர் அய்யப்பசாமி, உடுமலை நகர துணை தலைவர்கள்உமா குப்புசாமி, கொண்டம்மாள், ,தம்பிதுரை,கண்ணப்பன், கணேஷ் ,ஆனந்த் ,புவனேஸ்வரி, பாலு,நகர செயலாளர்கள் நாகவேணி,சிவசங்கர், முருகேசன், வெங்கடாசலம், செல்வராஜ், காளிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.