உள்ளூர் செய்திகள்

ஆய்வுக் கூட்டம் நடைபெற்ற காட்சி.

விபத்தில்லா திருப்பூர் மாவட்டத்தை உருவாக்க வேண்டும் - அதிகாரிகள், போலீசாருக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

Published On 2023-06-01 10:47 GMT   |   Update On 2023-06-01 10:47 GMT
  • மதுபோதையில் வாகனத்தை இயக்குவது.
  • நான்கு சக்கர வாகனங்களில் சீட்பெல்ட் அணியாததுமாகும்.

திருப்பூர் :

திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் சட்டம்- ஒழுங்கு தொடா்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் பேசியதாவது:- சாலை விபத்தில்லா தமிழகத்தை உருவாக்கும் வகையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளாா். இதனடிப்படையில் திருப்பூா் மாவட்டத்தில் சாலை விதிகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தி விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைத் தவிா்க்கும் வகையில் பல்வேறு தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சாலை விபத்துகளுக்கு மிக முக்கியமான காரணம் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் பயணிப்பது, மதுபோதையில் வாகனத்தை இயக்குவது, வாகனத்தை இயக்கும்போது கைப்பேசியைப் பயன்படுத்துவது, நான்கு சக்கர வாகனங்களில் சீட்பெல்ட் அணியாததுமாகும்.ஆகவே சாலை விபத்து தொடா்பாக போக்குவரத்து அலுவலா்கள் மற்றும் காவல் துறையினா் பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தி விபத்தில்லாத மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.சாமிநாதன், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், திருப்பூா் சாா்ஆட்சியா் ஸ்ருதன் ஜெய் நாராயணன், துணை காவல் கண்காணிப்பாளா் வனிதா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் அ.லட்சுமணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) விஜயராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். 

Tags:    

Similar News