உள்ளூர் செய்திகள்

கல்குவாரிகளில் சப்- கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஆய்வு செய்த காட்சி.

பல்லடம் அருகே கல்குவாரிகளில் சப் -கலெக்டர் திடீர் ஆய்வு

Published On 2023-08-11 15:46 IST   |   Update On 2023-08-11 15:46:00 IST
  • குவாரிகளில் குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிகின்றார்களா? என்று ஆய்வு செய்யப்பட்டது.
  • விதிமுறைகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்படுகிறதா? உள்ளிட்ட விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

பல்லடம்:

பல்லடம் கோடங்கிபாளையம் பகுதியில் உள்ள கல் குவாரிகளில் சப்- கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது குவாரிகளின் தற்போதைய நிலைமை, செயல்படும் தன்மை, பாதுகாப்பு நடைமுறைகள், குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிகின்றார்களா? சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளதா?

விதிமுறைகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்படுகிறதா? உள்ளிட்ட விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டது.ஆய்வின்போது பல்லடம் தாசில்தார் ஜெய் சிங் சிவக்குமார், துணை தாசில்தார் சுப்பிரமணியம், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News