உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு ஓவியம் வரைந்த மாணவர்களை படத்தில் காணலாம். 

ஓசோன் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஓவியம் வரைந்த மாணவர்கள்

Published On 2022-09-21 08:18 GMT   |   Update On 2022-09-21 08:18 GMT
  • ஓவியம் வரையும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
  • மாணவர்கள் ஒன்றிணைந்து 75 நிமிடத்தில் 75 அடி நீளத்தில் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்தனர்.

உடுமலை :

உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு, உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், சுற்றுச்சூழல் சங்கம் மற்றும் தேஜஸ் ரோட்டரி சங்கம் சார்பில் ஓவியம் வரையும் நிகழ்ச்சி எஸ்.கே.பி., பள்ளியில் நடத்தப்பட்டது.தேஜஸ் ரோட்டரி சங்க பட்டயத்தலைவர் சக்கரபாணி தலைமை வகித்தார். முன்னதாக ஆசிரியர் சதீஷ்குமார், வரவேற்றார். மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாசங்கர் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

ஓசோன் பாதுகாப்பு என்ற தலைப்பில் மாணவர்கள் ஒன்றிணைந்து 75 நிமிடத்தில் 75 அடி நீளத்தில் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்தனர். சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய அறிவியல் அலுவலர் லெனின்தமிழ்க்கோவன், விவேகானந்தா வித்யாலயம் பள்ளி தாளாளர் மூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.பின், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விளக்கி பேசினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் செய்திருந்தார். அனைத்து சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.முடிவில் என்.எஸ்.எஸ்., அலுவலர் சரவணன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News