உள்ளூர் செய்திகள்
சூரிய பகவானுக்கு 16 வகை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்ற காட்சி.
சூரியகிரணத்தை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு
- பிற்பகல் 3 மணி அளவில் கோவில்கள் நடை சாத்தப்பட்டது.
- கிரகணம் முடிந்த பின் கோவிலை சுத்தம் செய்து பூஜைகள் நடைபெற்றது.
பல்லடம் :
பல்லடத்தில், சூரிய கிரகணத்தை முன்னிட்டு நேற்று பிற்பகல் 3 மணி அளவில் கோவில்கள் நடை சாத்தப்பட்டது. பின்னர் மாலை 6 மணிக்கு கிரகணம் முடிந்த பின் கோவிலை சுத்தம் செய்து பூஜைகள் நடைபெற்றது.
அந்த வகையில் பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் கோளறுபதி நவகிரக கோட்டையில் சூரிய பகவானுக்கு சிறப்பு பூஜைகளும் 16 வகை திரவியங்களால் அபிஷேகமும் நடைபெற்றது. காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.