உள்ளூர் செய்திகள்

மேம்பாட்டு பயிற்சியில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம்.

சிறப்பு பயிற்றுநர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி

Published On 2023-11-21 15:59 IST   |   Update On 2023-11-21 16:16:00 IST
  • 14 ஒன்றிய வட்டார வள மையங்களில் பணியாற்றும் 54 சிறப்பு பயிற்றுனர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
  • சிறப்பு பயிற்றுனர்களுக்கு தேநீர் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.

திருப்பூர்:

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பாக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் சிறப்பு பயிற்றுனர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி கே.எஸ்.சி., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் திருப்பூர் தெற்கு வட்டார வள மையத்தில் நடைபெறுகிறது.

முதல் நாளான இன்று திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, திருப்பூர் மாவட்ட உள்ளடக்கிய கல்வி ஒருங்கிணைப்பாளர் பாலசுந்தரி ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இப்பயிற்சியில் திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 14 ஒன்றிய வட்டார வள மையங்களில் பணியாற்றும் 54 சிறப்பு பயிற்றுனர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். பயிற்சியில் கலந்து கொண்ட சிறப்பு பயிற்றுனர்களுக்கு தேநீர் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.  

Tags:    

Similar News