உள்ளூர் செய்திகள்

கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்த பஸ்களை படத்தில் காணலாம்.

விபத்து ஏற்படுத்தி விட்டு நஷ்டஈடு வழங்காத 4 அரசு பஸ்கள் ஜப்தி - கோர்ட்டு நடவடிக்கை

Published On 2022-10-10 11:23 GMT   |   Update On 2022-10-10 11:23 GMT
  • பேருந்து நிலையத்திலிருந்து கோவை செல்வதற்கு தயாராக இருந்த 4 பஸ்களை கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
  • பஸ்களை கோர்ட்டு வளாகத்திற்கு எடுத்துச் சென்றனர்.

திருப்பூர் :

திருப்பூரில் விபத்து ஏற்படுத்தி விட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வணங்காமல் போக்குவரத்து துறை காலதாமதம் செய்து வந்துள்ளது. அவ்வாறு நீண்ட நாளா நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகளில் தொடர்புள்ள அரசு பஸ்களை ஜப்தி செய்ய திருப்பூர் கோர்ட்டு உத்தரவிட்டது.

அந்த உத்தரவின்படி இன்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து கோவை செல்வதற்கு தயாராக இருந்த 4 பஸ்களை கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்தனர். பின்னர் அந்த பஸ்களை கோர்ட்டு வளாகத்திற்கு எடுத்துச் சென்றனர். ஜப்தி செய்த தகவலை போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News