உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

அர்ச்சகர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்க கோரிக்கை

Published On 2022-09-07 07:47 GMT   |   Update On 2022-09-07 07:47 GMT
  • பாரம்பரியம், கலாசாரம் மாறாமல் காப்பதில், கோவில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
  • பக்தர்களிடம் இறை நம்பிக்கை மேம்படும் வகையில் பணிகளை அர்ப்பணித்து செயல்படுகின்றனர்.

திருப்பூர் :

தமிழக முதல்-அமைச்சருக்கு கோவில் பூசாரிகள் நல சங்க மாநில தலைவர் வாசு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- நமது பாரம்பரியம், கலாசாரம் மாறாமல் காப்பதில், கோவில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கோவில் பூசாரிகள், அர்ச்சகர்கள் ஆகியோர் பக்தர்களிடம் இறை நம்பிக்கை மேம்படும் வகையில் பணிகளை அர்ப்பணித்து செயல்படுகின்றனர்.தமிழகம் முழுவதும் பல ஆயிரம் அர்ச்சகர்கள், பூசாரிகள் குடும்பங்கள் கோவில் பணியையே வாழ்வாதாரமாக கொண்டுள்ளன. பக்தர்களின் கோரிக்கைகளை இறைவனிடம் கொண்டு சேர்ப்பதில் அர்ச்சகர்களின் பங்கு முக்கியமானது.

பண்டிகைகள், திருவிழாக்கள் என விடுமுறை இன்றி அர்ச்சகர்கள், பூசாரிகள் பணியாற்றி வருகின்றனர்.தமிழகத்தில் சினிமாத்துறை, கல்வித்துறை, அறிவியல், கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கும் அரசு சார்பில் விருது வழங்கப்படுகிறது. இதேபோல் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வரும் சிறந்த கோவில் பூசாரிகள், அர்ச்சகர்களை ஆண்டுதோறும் தேர்வு செய்து அவர்களுக்கும் விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.  

Tags:    

Similar News