உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

பல்லடத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்

Published On 2023-08-08 16:22 IST   |   Update On 2023-08-08 16:22:00 IST
  • பள்ளிக் குழந்தைகள், பெண்கள், அந்த வழியே செல்வதற்கு அச்சப்படுகின்றனர்.
  • போராட்டத்திற்கு அந்தப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர்.

பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் - செட்டிப்பாளையம் சாலையில் உள்ள அரசு மதுபான கடையால் பல்வேறு இன்னல்கள் ஏற்படுகிறது. பள்ளிக் குழந்தைகள், பெண்கள், அந்த வழியே செல்வதற்கு அச்சப்படுகின்றனர். மேலும் போக்குவரத்து பாதிப்படுகின்றது. எனவே அந்த மதுபான கடையை அங்கிருந்து அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்தனர். அதன்படி இன்று போராட்டம் நடைபெற்றது.

இதற்கிடையே, பொதுமக்களின் கண்டனப் போராட்டத்திற்கு அந்தப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர்.மேலும் எம். எஸ் .எம் .ஆனந்தன் எம் .எல் .ஏ., அதிமுக., நிர்வாகிகள் , பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தை முன்னிட்டு பல்லடம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Tags:    

Similar News