உள்ளூர் செய்திகள்

திருப்பூர் ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்ட காட்சி. 

திருப்பூர் ரெயில் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை

Published On 2022-11-20 07:38 GMT   |   Update On 2022-11-20 07:38 GMT
  • காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
  • எர்ணாகுளம் முதல் பாட்னா வரை செல்லும் ரெயிலில் 3பெட்டிகள் இணைக்கப்பட்டு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது.

திருப்பூர் :

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் பல்கலைக் கழக வளாகத்தில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இதில், தமிழகத்தில் இருந்து ரெயில் மூலம் பலர் செல்கின்றனர். இந்த நிலையில் கோவையில் இருந்து காசி தமிழ் சங்கத்தினர் வாரணாசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் கலைபண்பாட்டு, இலக்கிய விழாவில் கலந்து கொள்ள செல்வதற்கு எர்ணாகுளம் முதல் பாட்னா வரை செல்லும் ரெயிலில் 3பெட்டிகள் இணைக்கப்பட்டு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயில் திருப்பூர் ரெயில் நிலையத்தில்2 நிமிடம் நின்று செல்கிறது.

இந்தநிலையில் மங்களூர் குண்டு வெடிப்பு சம்பவம் மற்றும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியையொட்டி திருப்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மாநகர காவல் துணை ஆணையர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் மூலம் ரெயிலில் சோதனை நடத்தப்பட்டது. பயணிகளின் உடைமைகளை போலீசார் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்து உள்ளே அனுப்புகின்றனர்.

Tags:    

Similar News