உள்ளூர் செய்திகள்

தேங்கி நிற்கும் கழிவுநீரை படத்தில் காணலாம் 

பெருமாநல்லூரில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

Published On 2023-10-07 11:49 GMT   |   Update On 2023-10-07 11:49 GMT
  • பெருமாநல்லூர் ஊராட்சியில் மெயின் ரோட்டில் இருந்து 100 அடி தூரத்துக்கும் மேல் குழி தோண்டி உள்ளார்கள்.
  • கழிவுநீர் கால்வாயும் அமைக்கவில்லை. அடுத்த 300 அடிக்கு மேல் கால்வாய் அமைத்துள்ளார்கள்.

பெருமாநல்லூர்:

திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட காமாட்சி அம்மன் காலனி, கே.எம்.சி. பப்ளிக் ஸ்கூல் எதிரில் உள்ள தெருவில் மத்திய அரசு நிதியில் இருந்து மூன்று வருடங்களுக்கு முன்பே கழிவுநீர் கால்வாய் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் பெருமாநல்லூர் ஊராட்சியில் மெயின் ரோட்டில் இருந்து 100 அடி தூரத்துக்கும் மேல் குழி தோண்டி உள்ளார்கள். ஆனால் கால்வாய் அமைக்க வில்லை. அடுத்த 200 அடிக்கு மேல் குழியும் தோண்டவில்லை. கழிவுநீர் கால்வாயும் அமைக்கவில்லை. அடுத்த 300 அடிக்கு மேல் கால்வாய் அமைத்துள்ளார்கள். அதன் தரம் மிகவும் மோசமாக உள்ளது. மேலும் கால்வாயில் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் தேங்கியுள்ளது. வீடுகளே இல்லாத பக்கம் கால்வாய் நேர்கோட்டில் இல்லாமல் வளைந்தும், நெளிந்தும் போடப்பட்டுள்ளது. இது அமைத்ததன் நோக்கமே புரியாமல் அந்த தெருவில் உள்ள மக்கள் புலம்பி தவிக்கிறார்கள். வீடுகள் அதிகம் உள்ள பகுதியில் கால்வாய் அமைக்காமல் ஊருக்கு ஒதுக்குப்புறம் குறைந்த வீடுகளே உள்ள பகுதியாக தேர்ந்தெடுத்து பாதி பகுதிக்கு மட்டும் கழிவுநீர் கால்வாய் அமைத்ததால் நிதி முறைகேடு ஏற்பட்டு இருக்கலாம் என்று பொதுமக்கள் சந்தேகிக்கிறார்கள். எனவே இது பற்றி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க உள்ளோம். மேலும் திருப்பூர் வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் பொதுமக்களை ஒன்றிணைத்து ஆர்ப்பாட்டமும் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த தகவலை திருப்பூர் மாவட்டம் வடக்கு ஒன்றிய பா.ஜ.க. பொது செயலாளர் பா.குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News