உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

நாகர்கோவில் - கோவை ரெயில் ரத்து

Update: 2023-03-24 05:22 GMT
  • மேலப்பாளையம் - நாங்குநேரி இடையே இரட்டை தண்டவாள அமைப்பு பணிகள் நடைபெற உள்ளது.
  • சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் :

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் - நாங்குநேரி இடையே இரட்டை தண்டவாள அமைப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாகர்கோவில் - கோவை ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) நாகர்கோவிலில் காலை7.35 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு வர வேண்டிய ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதுபோல் நாளை (சனிக்கிழமை) கோவையில் காலை 8மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்ல வேண்டிய ரெயில் சேவை முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.இந்த தக–வலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Tags:    

Similar News