வரைவோலையை கலெக்டர் வினீத் முன்னிலையில் இந்திரா சுந்தரம் ,மூதாட்டி ஜெயலட்சுமியிடம் வழங்கிய காட்சி.
இந்திரா சுந்தரம் அறக்கட்டளை சார்பில் மூதாட்டிக்கு வீடு வாங்க நிதியுதவி
- ருப்பூர் கோட்ட நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
- அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அனுப்பர்பாளையம் :
திருப்பூர் பி.என்.ரோடு பாண்டியன்நகர் பகுதியை சேர்ந்த மூதாட்டி ஜெயலட்சுமி திருப்பூர் கோட்ட நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு கேட்டு விண்ணப்பித்திருந்தார். அவருக்கு நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் பயனாளியின் பங்களிப்பு தொகையான ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 700-ஐ ஜெயலட்சுமியால் முழுமையாக செலுத்த முடியாமல் திணறினார்.
இந்த தகவலறிந்ததும் இந்திரா சுந்தரம் அறக்கட்டளை நிறுவனத்தலைவர் இந்திரா சுந்தரம் ஜெயலட்சுமி நிதியுதவி செய்ய முடிவு செய்தார். இதன்படி ரூ.33 ஆயிரத்து 700-க்கான வரைவோலையை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் வினீத் முன்னிலையில் இந்திரா சுந்தரம் ,மூதாட்டி ஜெயலட்சுமியிடம் வழங்கினார். இதில் அறக்கட்டளை நிர்வாகிகள் பூர்ணிமா, ராஜா முகம்மது உள்பட பலர் கலந்து கொண்டனர்.