உள்ளூர் செய்திகள்

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில காணலாம்.

மின் கட்டண உயர்வை கண்டித்து திருப்பூரில் இந்திய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-08-04 10:22 GMT   |   Update On 2022-08-04 10:22 GMT
  • மின் கட்டண உயர்வால் ஏழை எளிய மக்களும், தொழில்களும் பாதிப்படையும்
  • மத்திய, மாநில அரசுகளின் செயலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் :

தமிழக அரசு மின்கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்தும் மத்திய அரசு பால், அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதித்தை கண்டித்தும்,உடனடியாக உயர்த்தப்பட்ட வரி மற்றும் மின் கட்டணத்தை திரும்ப பெறக் கோரி திருப்பூர் ரயில்நிலையம் முன்பு இந்திய ஜனநாயக கட்சி திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு உயர்த்தியுள்ள மின் கட்டண உயர்வால் ஏழை எளிய மக்களும், தொழில்களும் பாதிப்படையும்.இதே போல் மத்திய அரசு அரிசி பால் உள்ளிட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை விதித்துள்ளது.மத்திய மாநில அரசுகளின் இச்செயலை கண்டித்து திருப்பூர் மாவட்ட இந்திய ஜனநாயக கட்சி சார்பில் மாவட்ட தலைவர் பாரி கணபதி தலைமையில்,திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சோனை முத்து,மாவட்டத்துணைத் தலைவர் முருகேசன், பொருளாளர் சக்திவேல், இளைஞரணி முருகன், மாணவரணி வேலுச்சாமி உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News