உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்
வெள்ளகோவிலில் தனியார் நிறுவன மேலாளரை தாக்கிய 4பேர் கைது
- வட மாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து காங்கேயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் அருகே காடையூரான் வலசில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் தீனதயாளன் (வயது 31) என்பவர் மேனேஜராக வேலை செய்து வருகிறார். அதன் அருகில் உள்ள ஒரு கம்பெனியில் வட மாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் இரு கம்பெனி தொழிலாளர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதனால் தீனதயாளனை அருகில் உள்ள கம்பெனியில் வேலை செய்து வந்த வட மாநில தொழிலாளர்கள் வமிஸ்வர் பானி பட்டர் (22) , கணேஷ் தேகுர் (23) ,அமல் சிகரி (35) ,திலீப் முண்டா (23) ஆகியோர் சேர்ந்து தாக்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து காங்கேயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.அதன் பேரில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.