உள்ளூர் செய்திகள்

சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்.

குன்னத்தூர் பகுதியில் பலத்த மழை

Published On 2023-09-01 16:27 IST   |   Update On 2023-09-01 16:27:00 IST
  • 2 மணி அளவில் பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து மதியம் 3.30 மணி வரை பெய்தது.
  • நான்கு சக்கர வாகனங்கள் முகப்பு விளக்கு போட்டு ஊர்ந்து சென்றது.

பெருமாநல்லூர்:

திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர் பகுதியில் கடந்த 4 மாதங்களாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. இதனால் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் மழை இல்லாத காரணத்தினால் மிகவும் கவலையடைந்தனர்.

இந்தநிலையில் நேற்று (வியாழக்கிழமை) மதியம் சுமார் 2 மணி அளவில் மழை வெளுத்து வாங்கியது. தொடர்ந்து மதியம் 3.30 மணி வரை பெய்தது. இதனால் பஸ் நிலையத்தில் இருந்து பெருந்துறை ரோடு, காமராஜர் சிலை வரை மழைநீர் கரைபுரண்டு ஓடியது. கழிவு நீர் கால்வாய் நிரம்பி வழிந்தது. இதனால் வாகன ஓட்டிகள் ஆங்காங்கே ஒதுங்கினர்.

இதேபோல் ஊத்துக்குளி ரோடு சார்பதிவாளர் அலுவலகம் எதிரில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் நான்கு சக்கர வாகனங்கள் முகப்பு விளக்கு போட்டு ஊர்ந்து சென்றது. இந்த மழையினால் அப்பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News