உள்ளூர் செய்திகள்

காத்திருப்புப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள்.

அவிநாசிபாளையத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

Published On 2023-07-06 12:11 IST   |   Update On 2023-07-06 12:11:00 IST
  • கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகில் போரட்டம் நடைபெற்றது.
  • தமிழக அரசு 100 நாள் வேலை திட்ட பணிகளை முழுவதும் வேளாண் துறை பணிகளுக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

பல்லடம்:

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் நேற்று பல்லடம் அருகே உள்ள அவினாசிபாளையம் சுங்கம் பகுதியில் தொடங்கியது. கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே தொடங்கிய இந்த காத்திருப்பு போராட்டத்தை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில தலைவர் சண்முகம் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.பொங்கலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெருந்தொழுவு மகாலிங்கம்,மேற்கு மாவட்ட செயலாளர் ஏ.பி.டி மகாலிங்கம்,கிழக்கு மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளான பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும்,மத்திய அரசு எம்.எஸ். சுவாமிநாதன் ஆணையத்தின் அறிக்கை படி சாகுபடி செலவுடன் 50 சதவீதம் கூடுதலாக சேர்த்து அனைத்து விவசாய பொருட்களுக்கும் விலை நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும், தமிழக அரசு 100 நாள் வேலை திட்ட பணிகளை முழுவதும் வேளாண் துறை பணிகளுக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஈசன், மாநில துணை பொதுச் செயலாளர் பார்த்தசாரதி, மாவட்ட பொருளாளர் ரமேஷ், அகில இந்திய பிரதிநிதி நல்லாக்கவுண்டர் உள்பட பலர் பேசினர்.

கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்த காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News