உள்ளூர் செய்திகள்

மின்நுகர்வோருக்கு அறிவிப்பு.

ரூ.2 ஆயிரத்திற்கும் அதிகமான மின் கட்டணத்தை ஆன்லைன் வாயிலாக செலுத்த வேண்டும் - மின் வாரிய அதிகாரிகள் உத்தரவு

Published On 2022-10-27 12:59 IST   |   Update On 2022-10-27 12:59:00 IST
  • புதிய நடைமுறைப்படி வரும் 19ம் தேதி முதல், 2,000 ரூபாய் வரையிலான கட்டணத்தை, வசூல் மையத்தில் செலுத்தலாம்.
  • மின்நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றனர்.

திருப்பூர் :

மின் கட்டண உயர்வு அமலான நிலையில், இரண்டாயிரம் ரூபாய்க்கு அதிகமான பரிவர்த்தனையை, 'ஆன்லைன...வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டுமென, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

புதிய நடைமுறைப்படி வரும் 19ம் தேதி முதல், 2,000 ரூபாய் வரையிலான கட்டணத்தை, வசூல் மையத்தில் செலுத்தலாம். அதற்கு அதிகமான தொகையை, ரொக்கமாக செலுத்த முடியாது.ஆன்லைன் பரிவர்த்தனை வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றனர்.

Tags:    

Similar News