உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் பேசிய காட்சி.

வெள்ளகோவிலில் தி.மு.க. செயற்குழு கூட்டம்

Published On 2023-03-31 16:15 IST   |   Update On 2023-03-31 16:15:00 IST
  • வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
  • கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது.

வெள்ளகோவில் :

வெள்ளகோவில் முத்தூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெள்ளகோவில் ஒன்றிய, நகர, முத்தூர் பேரூர் கழக தி.மு.க. செயற்குழு கூட்டம், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் தலைமையில், காங்கேயம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் உமாராணி முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில் வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றுவது குறித்தும், கட்சி வளர்ச்சி குறித்தும்ஆலோசி க்கப்பட்டது.இதில் திருப்பூர் தெற்கு மாவட்ட துணை செயலாளர் ராசி கே.ஆர்.முத்துக்குமார், வெள்ளகோவில் ஒன்றிய செயலாளர் மோளகவுண்டன் வலசு கே.சந்திரசேகரன்,நகர செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன், முத்தூர் பேரூர்செயலாளர் செண்பகம் பாலு மற்றும் வாக்குச்சாவடி ஒருங்கிணை ப்பாளர்கள், கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News