உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

நடப்பாண்டு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் அனைவருக்கும் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் - கலெக்டரிடம் மனு

Published On 2022-08-24 05:43 GMT   |   Update On 2022-08-24 05:43 GMT
  • மின்வாரியத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
  • தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.

திருப்பூர் :

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் அனைவருக்கும் நடப்பு ஆண்டு தீபாவளி போனஸ் வழங்கவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பு பொதுச்செயலாளர் சரவணன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- மின்வாரியத்தில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். கடந்த 2011 - 2020 வரையிலான 10 ஆண்டுகளாக வெறும் 18 ஒப்பந்த தொழிலாளர்களே இருப்பதாக கூறி அவர்களுக்கு மட்டுமே தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.

நடப்பு ஆண்டு வரும் அக்டோபர்24-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் போனஸ் மற்றும் கருணை தொகை வழங்கவேண்டும். மாவட்டத்திலிருந்து இன்றளவும் ஒப்பந்த தொழிலாளர் விவர பட்டியல் மின்வாரிய தலைமை பொறியாளர் பணியமைப்பு அலுவலகத்துக்கு அனுப்பவில்லை.

எனவே இப்பணிகளை துரிதமாக மேற்கொள்ளவேண்டும். மின்வாரிய ஒப்பந்த தொழிலாளரை பணி நிரந்தரம் செய்யவேண்டும்.இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News